• Sun. Oct 12th, 2025

ஸ்ட்ரைக் முடிவு. பணிப்பகிஸ்கரிப்பை கைவிட ரயில்வே ஊழியர்கள் கைவிட சம்மதம் தெரிவித்தனர்

Byadmin

Dec 13, 2017

ஸ்ட்ரைக் முடிவு. பணிப்பகிஸ்கரிப்பை கைவிட ரயில்வே ஊழியர்கள் கைவிட சம்மதம் தெரிவித்தனர்


பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு உறுப்பினர்களுக்கிடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்ற நிலையில் பணிப்பகிஸ்கரிப்பை ரயில்வே ஊழியர்கள் கைவிட சம்மதம் தெரிவித்ததாக அறிவிக்கப்ட்டுள்ளது.

இன்று காலை 9.30 அளவில்  அமைச்சரவை உபகுழுவின் தலைவர்  சரத் அமுனுகம தலைமையில்  ஆரம்பமான  பேச்சுவார்த்தையில் இம்முடிவு எடுக்கபட்டுள்ளது.

இதில்  பணிப்ப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள அனைத்து ரயில்வே தொழிற்சங்கங்களும் பங்குபற்றினர்.

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு இன்றுடன் 7 ஆவது நாளாக தொடர்ந்த நிலையில் இம்முடிவு எடுக்கபட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க சம்பள சுற்று நிரூபத்திற்கு அமைய தமது சம்பளத்தை மறுசீரமைககுமாறும் பதவி உயர்வுகளை வழங்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி ரயில் ஊழியர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

இதேவேளை, பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்ட ஒப்பந்த சேவையாளர்கள் இன்று சேவைக்கு சமூகமளிக்காவிடின், அவர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்படுவார்கள் என ரயில்வே பொது முகாமையாளர் மகாநாம அபேவிக்ரம தெரிவித்தும் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *