இலங்கையின் போர் விமானங்களை தரமுயர்த்த இஸ்ரேல் பேச்சுவார்த்தை
இலங்கை விமானப்படையின் கிபிர் போர் விமானங்களை தரமுயர்த்துவதுகுறித்து, இஸ்ரேல் ஏரோஸ்பேஸ்
இன்டஸ்றீஸ் நிறுவனம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்திவருகிறது.
இலங்கை விமானப்படையிடம் கைவிடப்பட்ட நிலையில் உள்ள 5 கிபில் போர்விமானங்களை தரமுயர்த்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதுதொடர்பாகவே இலங்கை அரசுடன் பேசி வருவதாக, இஸ்ரேல் ஏடீராஸ்பேஸ்இன்டஸ்றீஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிபிர் போர் விமானங்களை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம் அதன்வடிவமைப்பை தரமுயர்த்தி, பராமரிப்பு உதவி உத்தரவாதத்துடன் வழங்கமுடியும் என்றும் கூறியுள்ளது.