“எதிர்வரும் தேர்தல்களில் எவரையும் ஆதரிக்கப்போவதில்லை” – ஞானசார தேரர்
எதிர்வரும் காலத்தில் இடம்பெறும் தேர்தல்களில் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அல்லது கட்சிக்கும்
தாம் ஆதரிக்க போவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தேஞானசார தேரர் குழு மற்றும் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று, கொழும்பு ஆயர்இல்லத்தில் வைத்து நடைபெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஞானசாரதேரர் ..
கடந்த 2015 தேர்தலில் தாங்கள் அரசியல் வாதிகளுக்கு ஆதரவு வழங்கிவாங்கி கட்டிக்கொண்டதாக கூறிய அவர் தற்போது நாட்டில் தலைவர்கள்அதிகரித்து விட்டதாகவும் அதனால் தற்போது அமைதியாக இருந்துநடப்பவைகளை பார்த்துக்கொண்டு இருப்பது சிறந்தது என அவர்குறிப்பிட்டார்.