மத்திய வங்கியின் பிணை முறி குறித்த சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தாம் பாராளுமன்றில் எந்தவித அறிவிப்புக்களையும் விடுக்க தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2008 – 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிணை முறி கொடுக்கல் வாங்கல் குறித்து கடந்த ஆட்சியில் இருந்த முன்னாள் நிதியமைச்சர் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமைக்கே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.