(பொலித்தீன் வர்த்தகர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்)
இவ்வருட ஆரம்பத்தில் இருந்து பொலித்தீன் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக எழுந்துள்ள பிரச்சினையை கருத்திற் கொண்டு, பொலித்தீன் மற்றும் மீள்சுழற்சி செய்ய முடியுமான பொலித்தீன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற வர்த்தகர்களை பதிவு செய்யும் திட்டம் மத்திய சுற்றாடல் அதிகார சபைஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நடைமுறையிலுள்ள பொலித்தீன்கள் இலங்கையில் தயாரிக்கப்படுவது குறைவு என்பதுடன், பெரும்பாலும் வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால், உயிரியல் சீர்கேடுகளை ஏற்படுத்துகின்ற பொலித்தீன் மற்றும் மீள்சுழற்சி செய்ய முடியுமான பொலித்தீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் அவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்ற சேர்க்கைகள் இறக்குமதி செய்யப்படுவது சம்பந்தமான பரிந்துரைகள் அடங்கிய அளவுகோல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.