• Sat. Oct 11th, 2025

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பின்தங்கிய 83 பள்ளிவாசல்களுக்கு நிதி உதவி

Byadmin

Jun 7, 2017
கொழும்பு மாநகர சபையினால் வருடா வரும் சகல இனங்களின்  மத ஸ்தானங்களுக்கும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பின்தங்கிய 83 பள்ளிவாசல்களுக்கு நிதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளிவாசலுக்கு ருபா 50 ஆயிரம் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வு நேற்று முன்தினம் (5) அலறி மாளிகையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சா் சாகல ரத்னாயக்கா, இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பொளசி, பிரதம மந்திரியின் இணைப்புச் செயலாளா் ரோசி சேனாநாயக்க்க, கொழும்பு மாநகர சபையின் ஆணையாளரும் கலந்து கொண்டு காசோலைகளை பள்ளிவாசல்களது தலைவர் செயலாளா்களிடம்  கையளித்தனா்.
இங்கு உரையாற்றிய சடடம் ஒழுங்கு அமைச்சா் உரையாற்றுகையில் –
அண்மைக்காலமாக சில மதவாதிகளினால் நடைபெற்றுவரும் செயல்களையிட்டு நான் கவலையடைகின்றேன். யாராக இருந்தாலும் சட்டம் ஒழுங்கு சகலருக்கும் சமம், சட்டத்திற்கு எதிராக குற்றம் விளைவிப்பவா்கள் உடன் கைது செய்து அவா்கள் தண்டிக்கப்படுவாா்கள்.   அண்மையில் நடைபெற்ற கடைகள் எரிப்பு சில சி.சி,ரி கமராவின் ஊடாக அவதாணித்ததைத் தொடா்ந்து  அடையாளம் காணமுடியாமல் உள்ளது. சில கடைகள் பக்கத்து கடையில் வைத்த சிறுவிளக்கு விழுந்ததினால் பக்கத்து கடை எரிந்து தீப்பற்றியுள்ளது.  இவ் விடயம் முஸ்லீம் அமைச்சா்கள் பாராளுமன்ற உறுப்பிணா்கள் பாராளுமன்றத்திலும் காரசாரமாக விவாதித்தாா்கள். அதே போன்று அமைச்சரவையிலும் விவாதிக்கப்பட்டது.
இக் குற்றங்களை இழைத்தவர்களை இனம் கண்டு உடனடியாக கைது செய்து மாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என அமைச்சா் அங்கு தெரிவித்தாா்.

 -அஷ்ரப் ஏ சமத் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *