• Sat. Oct 11th, 2025

புரவலர் அல்ஹாஜ் ஹாசீம் உமர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

Byadmin

Jun 7, 2017

சுயாதீன தொலைக்காட்சியின் (ITN)  முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர், ஊடகவியலாளர்களுக்கென்று ஏற்பாடு செய்த முதலாவது புனித ரமழான் மாத நோன்பு திறக்கும் நிகழ்வு மற்றும் இராப் போஷண விருந்தும் கொள்ளுப்பிட்டியில் உள்ள குயின்ஸ் கபே ஹோட்டலில் நடைபெற்றது. ஜனாப் ருசைக் பாருக் பாங்கு சொல்வதையும், கலைச்செல்வன் எம்.எம். றவுப் உரையாற்றுவதையும் ஜனாபா இளம் முஸ்லிம் மாதர் சங்கத் தலைவி ஜனபா பவாசா தாஹாவிடமிருந்து நவமனி பிரதம ஆசிரியர் என்.எம் அமீன் புரவர் சில பதிவுகள் எனும் நூலைப்; பெற்றுக் கொள்வதையும் புரவலர் ஹாசீம் உமர், மனித நேயன் இர்ஷாத், ஏ. காதர் ஆகியோர் உடனிருப்பதையும் இப்தாரில் பங்கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

-அஷ்ரப் ஏ சமத் – / – எம்.எஸ்.எம்.ஸாகிர் – 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *