• Sat. Oct 11th, 2025

சமுதாயத்தை தட்டி எழுப்பிய, மாவீரன் பழனிபாபா

Byadmin

Jan 30, 2018

(சமுதாயத்தை தட்டி எழுப்பிய, மாவீரன் பழனிபாபா)

முஸ்லிம் சமுதாயம் முகவரியற்று, வீரமற்று முடங்கி கிடந்த நிலையில் சமுதாயத்தை தட்டி எழுப்பியவர் மாவீரன் பழனிபாபா.
அவர் இந்துத்துவ பயங்கரவாதிகளால் வெட்டி வீழ்த்தப்பட்ட நாள் ஜனவரி 28…
பொதுவாக செல்வந்தர்கள் தங்களுடைய செல்வத்தை மேலும் பெருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். (அது தவறும் அல்ல…)
ஆனால் பெரும் செல்வந்தரான பழனிபாபா, தம்முடைய செல்வத்தை மேலும் பெருக்க வேண்டும் என்று எண்ணாமல் இறுதிவரை சமுதாயத்திற்காக வீதியிலேயே வாழ்ந்து, வீதியிலேயே வீழ்ந்தார்.
ராஜீவ் காந்தி, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ராமதாஸ், கி.வீரமணி போன்ற தலைவர்களோடு நெருங்கி பழகினார்.
தலித்துக்கள், நாடார்கள், யாதவர்கள், கவுண்டர்கள், வன்னியர்கள், தேவர்கள், கிறித்தவர்கள் என அனைத்து சமூக மக்களோடும், அனைத்து சமூக தலைவர்களோடும் நட்பு பாராட்டினார்.
120 முறைக்கும் மேல் சிறை சென்ற பழனிபாபா சட்டத்தின் துணை கொண்டே பொய் வழக்குகளை உடைத்தெறிந்து ராஜநடையோடு வெளியில் வந்தார்.
இன்று முஸ்லிம் சமுதாயம் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறது. இட ஒதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாத அந்த காலக்கட்டத்திலேயே
அதற்கு விதை தூவியவர் பழனிபாபா…
பழனிபாபா அரசியல் கட்சி தொடங்கி MLA ஆக வேண்டும், MP ஆக வேண்டும் என்று விரும்பியவரில்லை, இயக்கம் தொடங்கி இறுதிவரை சமுதாயத்திற்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தம்முடைய உயிரை தியாகம் செய்தார்.
அவரது உரைகளும், எழுத்துக்களும் இந்துத்துவ பயங்கரவாதத்தை துகிலுரித்தன.
இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பழனிபாபா ஜனவரி 28 இந்துத்துவ பயங்கரவாதிகளால் இரவு நேரத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டார்.
ஒரு பழனிபாபா புதைக்கப்பட்டார். லட்சோபலட்ச பழனிபாபாக்கள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து விதைக்கப்பட்ட புரட்சி பூக்களாய் வெடித்து கிளம்பி இந்திய துணை கண்டத்தின் அஸ்திரத்தை உலகறிய செய்து கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *