• Sat. Oct 11th, 2025

ஹாதியா- ஷெபின் ஜகான் திருமணத்தை ரத்து செய்ய முடியாது உச்ச நீதிமன்றம்

Byadmin

Feb 23, 2018

(ஹாதியா- ஷெபின் ஜகான் திருமணத்தை ரத்து செய்ய முடியாது உச்ச நீதிமன்றம்)

பரஸ்பர சம்மதத்துடன்தான் ஹாதியா- ஷெபின் ஜகான் திருமணம் நடந்துள்ளது என்பதால் திருமணத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்ச  நீதிமன்றம்  ெதரிவித்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தை சேர்ந்த அசோகன் மகள் அகிலா. சேலத்தில் ஹோமியோ கல்லூரியில் படிக்கும்போது முஸ்லிமாக மாறி  கொல்லத்தை சேர்ந்த ஷெபின் ஜகான் என்பவரை திருமணம் செய்தார். தனது பெயரையும் ஹாதியா என்று மாற்றிக்கொண்டார். இதையடுத்து திருமணத்தை ரத்து  செய்யக்கோரி அசோகன் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். மனுவில் ஷெபின் ஜகானுக்கு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருக்கிறது. மகளை  தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்தார்.

இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் ஹாதியா – ஷெபின் ஜகான் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஷெபின் ஜகான் உச்ச  நீதிமன்றத்தில் மனு அளித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் ஹாதியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நான் முஸ்லிம்  மதம் குறித்து நன்கு படித்த பிறகுதான் அந்த மதத்திற்கு மாறினேன்.

அதனால் ஷெபின் ஜகானின் மனைவியாக வாழ என்னை அனுமதிக்கவேண்டும் என்று  கூறியிருந்தார்.அசோகன் தாக்கல் செய்த விளக்கத்தில், என் மகளை மதம் மாற்றிய மஞ்சேரியில் உள்ள சத்ய சரணி அமைப்பிற்கு பாப்புலர் பிரண்ட் அமைப்புடன் தொடர்பு  உள்ளது. என் மகளை சிரியாவிற்கு கடத்தி செல்வதுதான் அவர்களது ேநாக்கம். முஸ்லிமாக அவர் மாறியதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால்  அவளது பாதுகாப்புதான் எனக்கு முக்கியம். இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில்  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்ேபாது நீதிபதி தீபக் மிஸ்ரா கூறுகையில், ஹாதியா திருமணம் பரஸ்பர சம்மதத்துடன் தான்  நடந்துள்ளது. எனவே திருமணத்தை ரத்து செய்ய முடியாது. தற்போது தொடரப்பட்டுள்ளது பலாத்கார வழக்கல்ல. ஷெபின் ஜகானுக்கு தீவிரவாத இயக்கத்துடன்  தொடர்பு உள்ளதா என்பது குறித்து  என்ஐஏ விளக்கம் அளிக்கவேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை மார்ச் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *