(உலகிலேயே மிகச்சிறிய பென்சிலை கண்டுபிடித்து இந்தியர் சாதனை…!)
இந்தியா, உத்தரகாண்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் உலகிலேயே மிகச்சிறிய பென்சிலை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹால்டுவானியைச் சேர்ந்த பிரகாஷ் சந்திரா உபாத்யே என்பவர் 5 மி.மீ நீளமும் 0.5 மி.மீ அகலமும் கொண்ட ஒரு சிறிய பென்சிலை உருவாக்கி இருக்கிறார். இந்த பென்சிலை உருவாக்க அவருக்கு 4 நாட்கள் தேவை பட்டதாக கூறியிருக்கிறார். இது உலகின் மிகச்சிறிய பென்சில் என்று சாதனை படைத்துள்ளது. இதேபோல் பல சாதனைகளை படைக்க் பிரகாஷை பலர் பாராட்டி வருகின்றனர்.