(07 பேரை காவு கொண்ட கட்டிட இடிபாடு குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுப்பு)
கொழும்பு – கிரேண்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டிடம் ஒன்று நேற்று(14) இடிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில் காவற்துறை விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
குறித்த இந்த அனர்த்தத்தில் 04 பெண்கள் மற்றும் 03 ஆண்கள் உள்ளிட்ட 07 பேர் உயிரிழந்தனர்.
தேயிலை களஞ்சிய கட்டிடமொன்றே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ள நிலையில், இதில் காயமடைந்த நபர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.