(அர்ஜுன மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு)
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன்(15) நிறைவடைகின்றது.
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் தற்போது சந்தேகத்திற்குரியவராக அர்ஜூன மகேந்திரன் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவரை குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜனரத்ன, கடந்த 5ஆம் திகதி அழைப்பாணை பிறப்பித்திருந்திருந்தார்.
இதற்கமைய, 10 நாட்கள் கால அவகாசம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது சிங்கபூரில் உள்ள அவர் இதுவரையில் நாடு திரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.