(பிரதமர் பதவி சிரிபாலவுக்கு – தினேஷ் சுசில் ஒன்றிணைந்த குழு நியமனம்…)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சி ஆகியவை ஒன்றிணைந்து நிறுவ எதிர்பார்க்கும் அரசாங்கத்தில் பிரதமர் பதவி சிரேஷ்ட அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவுக்கு வழங்குவது குறித்து இருதரப்பினருக்கும் இடையே ஏகமனதான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் குழு மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையே இன்று(16) காலை நடைபெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
மேலும், குறித்த உடன்படிக்கையினை தொடர்ந்து அதுகுறித்த நடவடிக்கைளை ஆராய ஒன்றிணைந்த எதிர்கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிகளுக்கு இடையே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் குழுவொன்றினை நியமிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.