(மொறவெவ: தேங்காய் இல்லாமையினால் அவதி)
திருகோணமலை மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட பகுதிகளிலுள்ள சில்லறைக்கடைகளில் தேங்காய் விற்பணைக்கு
இல்லாமையினால் பெண்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
தேங்காயை பயன்படுத்தி சமைக்கும் உணவு வகைகள் மற்றும் கறி வகைகள் செய்ய முடியாத நிலை காணப்படுவதுடன் அதனால் தேங்கண்ணையை பயன்படுத்தி கறிகள் சமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தேங்காய் தட்டுப்பாட்டினால் தேங்கண்ணையை பயன்படுத்தி சமைப்பதினால் வயிற்றில் அல்சர் நோய் உள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிப்பதுடன் காய்க்கும் மரங்களில் ஒரு வகையான நோய்கள் ஏற்படுவதாகவும் தென்னை மரங்கள் காணப்பட்டும் தேங்காய் தட்டுப்பாடு நிலவுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மொறவெவ பிரதேசத்திலுள்ள ரொட்டவெவ மஹதிவுல்வெவ மற்றும் தெவனிபியவர பகுதிகளிலுள்ள தென்னை மரங்களில் காய்க்கும் போது ஒரு வகையான நோய் பரவுவதால் அந்நோயினை இல்லாதொழிக்க தென்னை அபிவிருத்தி திணைக்களம் கூடிய கவனம் எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் எதிர்காலத்தில் தென்னை கன்றுகளை வீடுகளில் நாட்டி தேங்காய் பற்றாக்குறையினை நிவர்த்திக்க மக்களுக்கு அறிவூட்டல்களை வழங்க வேண்டுமெனவும் பிரதேச புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
-ABDUL SALAM YASEEM – TRINCO-