• Sun. Oct 12th, 2025

குவைத்திலிருந்து 4000 இலங்கையர் நாடு திரும்பினர்

Byadmin

Feb 19, 2018

(குவைத்திலிருந்து 4000 இலங்கையர் நாடு திரும்பினர்)

விசா அனுமதிப்பத்திரம் இன்றி குவைத்தில் வசித்து வரும் இலங்கையர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் இம்மாதம் 22ம் திகதியுடன் முடிவடைகின்றது. இந்தப் பொது மன்னிப்புக்காலத்தைப் பயன்படுத்தி 4 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் 800 பேர் நாடு திரும்பத்தயாராகி வருகின்றனர். சுமார் 15 ஆயிரம் இலங்கை ஊழியர்கள் உரிய விசா அனுமதிப்பத்திரம் இன்றி குவைத்தில் தங்கியிருப்பதாக அமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *