(சவூதி தடுப்பு முகாம்களில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை)
அபுதாபி பாதுகாப்பு தடுப்பு முகாமிலுள்ள இலங்கையர்களை விரைவாக நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
அபுதாபிக்கு விஜயம் செய்த நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள முகாம்களில் தங்கியுள்ள இலங்கையர்களின் சேமநலன்கள் தொடர்பான விடயங்களையும் கண்டறிந்தார்.
தொழில்வாய்ப்பிற்காக அங்குசென்று பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டவர்கள் இந்த முகாம்களில் தங்கியுள்ளதாகவும் இவ்வாறானோரை விரைவாக நாட்டுக்கு அழைத்துவர ஏற்பாடுசெய்யுமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.