• Sun. May 24th, 2026

அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிநெறி இடைநிறுத்தம்

Byadmin

Feb 20, 2018

(அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிநெறி இடைநிறுத்தம்)

பாடசாலை அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறியின் போது உயிரிழந்த அதிபரின் மரண விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த பயிற்சி நெறிகளை தற்கலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை சுஷி தேசிய பாடசாலையின் பெண் அதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குருணாகல் வாரியபொல, வயம்ப தலைமைத்துவ பயிற்சி முகாமில், பயிற்சி நடவடிக்கையின் போது ஏற்பட்ட திடீர் விபத்தொன்றில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக அமைச்சு மட்டத்தில் விசாரணை நடத்துவதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அந்த அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *