(ரணிலுக்கு பேராசை பிடித்துள்ளது !)
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பேராசை பிடித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் நிராகரித்த பிரதமர் இன்னமும் அதிகாரத்தில் இருப்பதென்பது அதிக பேராசையினாலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில், சமகால எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் தனது நிலைப்பாட்டை சபாநாயகரிடம் அறிவிக்க வேண்டும் என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.