(பெற்றோலிய தொழிற்சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது)
இன்று(22) காலை முதல் முன்னெடுக்கப்பட இருந்த தொழிற்சங்க போராட்டத்தினை கைவிட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் பந்துல சமன் குமார தெரிவித்திருந்தார்.
தமது கோரிக்கைக்கு இணங்க சம்பள உடன்படிக்கைக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்ட சம்பளத்தினை வழங்க, நேற்று(21) அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாட்டுக்கு வந்தமையினால் குறித்த தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் சம்பள திருத்தத்தில் ஜனவரி மாதம் கொலன்னாவ அண்மித்த ஊழியர்களுக்கு மற்றும் களஞ்சியசாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறித்த சம்பள திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறித்த ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தார்.