• Sun. Oct 12th, 2025

ஈரான் தாக்குதலுக்கு அஸ்வர் கண்டனம்

Byadmin

Jun 8, 2017

ஈரான் பாராளுமன்றத்தின் மீதும் ஆயத்துல்லாஹ் கொமைனியின் அடக்கஸ்தலத்தின் மீதும் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் எம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈரான் பாராளுமன்றம் தாக்கப்படுவதை கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

முஸ்லிம் உலகை இல்லாமல் ஒழிப்பதற்கு சர்வதேச யஹுதிப் பட்டாளம் எவ்வளவு மும்முரமாக பணியாற்றி வருகின்றது என்பது இதனால் நன்கு புலனாகின்றது.

எனவே இந்தப் புனித ரமழான் மாதத்தில் உலக முஸ்லிம் நாடுகளுக்கும் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்பள்ளிவாசல்களான புனித தளங்களுக்கும் பாதுகாப்புக்காக வேண்டி நாம் துஆச் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

ஈரான் நாடு எமக்கு கடந்த காலங்களில் பல வழிகளிலும் அதாவது யுத்த காலங்களிலும் ஏனைய காலங்களிலும் உதவி செய்துள்ளது. ஆகவே அது எம்முடைய ஒரு நேச நாடு.

ஆகவே, இந்தத் தாக்குதலை நாம் கண்டிப்பதோடு, சர்வதேச யஹுதி கூலிப்பட்டாளத்தின் அட்டகாசத்தை ஒழிக்க சகல வழிகளிலும் சர்வதேச முஸ்லிம் சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நான் அனைத்து முஸ்லிம்களையும் வேண்டுகின்றேன்.

இந்தப் புனித ரமழான் மாதத்தில் தறாவீஹ் தொழுகையின் போதும் ஏனைய தொழுகைகளிலும் எம்முடைய துஆக்களில் சர்வதேச முஸ்லிம்சமூகத்துக்காகவும் சர்வதேச முஸ்லிம் புனித தளங்களின் பாதுகாப்பு குறித்தும் நாம் அனைவரும் துஆச் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன் – என்றும் தெரிவித்துள்ளார்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *