(சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ)
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இலங்கையை வந்தடைந்தார்.
சுதந்திர தின நிகழ்வுகளின் போது பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் நடத்தப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகளின் போது போராட்டமொன்று நடத்தப்பட்டிருந்தது.
அதில் புலம்பெயர் தமிழ் சமூகத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை கழுத்தை அறுத்துக் கொலை செய்வதாக சைக மூலம் பிரிகேடியர் காண்பித்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பிரிகேடியர் பிரியந்தவின் பணியை வெளிவிவகார அமைச்சு இடைநிறுத்தியிருந்தது. எனினும், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய மீளவும் அவர் சேவையில் அமர்த்தப்பட்டிருந்தார்.