(சுதந்திர கிண்ணக் கிரிக்கட் தொடருக்கான டிக்கட் விற்பனை ஆரம்பம்)
எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சுதந்திர வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடருக்கான டிக்கற் விற்பனை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த டிக்கட்டுக்களை ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைமையகத்திலும், ஆர் பிரேமதாஸ சர்வதேச கிரிக்கட் விளையாட்டு மைதானத்திலும் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கட்டுக்கள் 300 ரூபா முதல் 5ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ள சுதந்திர கிண்ண முக்கோணத்தொடரில் இறுதிப் போட்டி அடங்கலாக ஆறு ரி-20 போட்டிகள் மார்ச் 18ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன .
குறித்த தொடரின்சகல போட்டிகளும் ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.