• Sat. Apr 4th, 2026

ஏலத்திற்கு வரும் ஸ்டீவ் ஜாப்ஸ் ரெஸ்யூம்

Byadmin

Mar 1, 2018

(ஏலத்திற்கு வரும் ஸ்டீவ் ஜாப்ஸ் ரெஸ்யூம்)

ஆப்பிள் நிறுவனம் துவங்கப்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஸ்டீவ் ஜாப்ஸ் பூர்த்தி செய்த ஒற்றை பக்க விண்ணப்ப படிவத்தில் ஸ்டீவ் எழுத்து பிழைகளுடன் தானே பூர்த்தி செய்திருக்கிறார். இத்துடன் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் தன் ஆர்வத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.
புகைப்படம்: நன்றி RR Auction
ஸ்டீவ் பூர்த்தி செய்த விண்ணப்பம் எந்த பணியில் சேர்வதற்கானது மற்றும் அவருக்கு அந்த வேலை உண்மையில் வழங்கப்பட்டதா என்ற விவரங்கள் தெரியவில்லை, எனினும் அது பல லட்சங்களுக்கு ஏலத்தில் விற்பனையாக இருப்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. தொலைப்பேசி வைத்திருப்பது குறித்த கேள்விக்கு இல்லை என குறிப்பிட்டிருக்கிறார்.
எலெக்ட்ராணிக்ஸ் டெக் அல்லது டிசைன் இன்ஜினியர் மற்றும் கம்ப்யூட்டர் புரியும் என விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இத்துடன் ஸ்டீவ் ஜாப்ஸ் என தன் பெயரையும், முகவரியில் ரீட் கல்லூரி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஓட்டுநர் உரிமம் வைத்து இருப்பதாகவும், கார் வைத்திருப்பது குறித்த கேள்விக்கு ‘சாத்தியம் ஆனால் சாத்தியமற்றது,’ என பதில் அளித்திருக்கிறார்.
புகைப்படம்: நன்றி RR Auction
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இயங்கி வரும் ஆர்.ஆர். ஆக்ஷன் நிறுவனம் மூலம் ஸ்டீவ் ரெஸ்யூம் ஏலத்தில் விடப்படுகிறது. ஏலத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் பணிக்கு விண்ணப்பித்த முதல் விண்ணப்ப படிவம் மட்டுமின்றி, ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட மேக் ஓ.எஸ். X பவுண்ட் டெக்னிக்கல் மேனுவல் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட 2008-ம் ஆண்டின் ஐபோன் சார்ந்த செய்தி குறிப்பு, ரோலண்ட் வெய்ண் கையெழுத்திட்ட ஆப்பிள் லோகோ உள்ளிட்டவை ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமின்றி பல்வேறு இதர நினைவு பொருட்களும் ஆர்.ஆர். ஆக்ஷன் நிறுவன ஏலத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *