(புத்துணர்ச்சி தரும் ஆரஞ்சு கேரட் ஜூஸ்)
தேவையான பொருட்கள் :
ஆரஞ்சு பழம் – 2,
கேரட் – ஒன்று,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
தேன் – தேவையான அளவு.
செய்முறை :
ஆரஞ்சு பழத்தின் தோல், விதையை நீக்கி தனியாக வைக்கவும்.
கேரட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
ஆரஞ்சு சுளைகளை தனியாக மிக்சியில் அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும்.
கேரட்டை தனியாக மிக்சியில் அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும்.
ஆரஞ்சு சாறுடன், கேரட் சாறு, எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து பருகவும்.
சத்தான ஆரஞ்சு கேரட் ஜூஸ் ரெடி.