• Mon. Oct 13th, 2025

தினமும் நீச்சல் பயிற்சி மேற் கொள்வதால் என்ன நன்மைகள் தெரியுமா..?

Byadmin

Mar 4, 2018

(தினமும் நீச்சல் பயிற்சி மேற் கொள்வதால் என்ன நன்மைகள் தெரியுமா..?)

வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என்று அனைவரும் செய்யக் கூடிய பயிற்சிகளில் நீச்சற்பயிற்சி முதன்மை பெறுகிறது. உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய வைக்கிறது இந்த நீச்சல் பயிற்சி.

இவ்வாறிருக்க நாம் தொடர்ந்து நீச்சற்பயிற்சி மேற் கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என உங்களுக்கு தெரியுமா?

01. கணினியில் வேலை பார்ப்பவர்கள் முதுகு வலியால் அவதிப்படுவார்கள். நீச்சல் அடிப்பதால் முதுகுதண்டுவடம் வலிமை பெற்று முதுகுவலி ஏற்படாது. தோல்வலி மற்றும் கழுத்துவலி என்பன நீங்கும்.

02. நீச்சல் பயிற்சி நம் உடலில் உள்ள பெரும்பாலான பகுதிகளை வலிமைப்படுத்தும் நல்ல உடற்பயிற்சியாக அமைகின்றது. தற்போது உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.

03. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் நீச்சல் பலனளிக்கும். இதனால் உடல் தசைகள் வலிமையாகும். அழகும் கூடும்.

04. நீச்சல் அடிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் ஹோர்மோன் பிரச்சனைகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.

05. நீச்சல் பயிற்சி என்பது ஒரு காற்றலைப் பயிற்சி. நுரையீரல் வலுப்பெறுவதற்கும் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இயங்குவதற்கும் நீச்சல் பயிற்சி நன்கு உதவுகிறது.

குறிப்பு:
குழந்தைகளுக்கு ஐந்து வயதில் நீச்சல் கற்றுத்தர ஆரம்பிக்கலாம். பதினெட்டு வயதுக்குள் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப்பிறகு உடலின் எடை கூடிவிடும். மூட்டுகளில் அசையும் தன்மையும் நெகிழ்வுத் தன்மையும் குறைந்து விடும். இந்தக் காரணங்களால், நீச்சல் கற்றுக் கொள்வது கடினம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *