(உள்ளூராட்சி மன்றங்களுக்கான பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தானி அறிவித்தல் வெளியீடு)
24 மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தானி அறிவித்தல் நேற்று(15) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு ஒரு வர்த்தமானி வீதம் வெளியிடப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்றத்திற்கு தெரிவானோரது பெயர் விபரங்கள் வெளியிடுவதில் தாமதமாகும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலினை எதிர்வரும் மார்ச் 20ம் திகதி வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சுக்கு தேர்தல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.