(பெரும்பாலான பாகங்களில் மழை)
இலங்கையின் மேற்கே அரேபியக் கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் நலிவடைந்து அப்பால் நகர்ந்து வருகின்றமை காரணமாக தாழமுக்கத்தின் விளைவுகள் இலங்கையின் மீதும், மேற்குக் கடலின்; மீதும் செலுத்தும் தாக்கம் குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது..
இன்று(16) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பெரும்பாலான பாகங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.
மத்திய, வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் 50 முதல் 75 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.