மஹரகம, நுகேகொட பகுதியில் முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்த நபர் பொதுபலசேனா இயக்கத்தை சேர்ந்தவர் என பொலிசார் சற்றுமுன் தெரிவித்தனர்.
அரச செய்தித் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக அறிவிப்பில் போலிஸ் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி இதனை தெரிவித்தார்.
நீண்டகாலமாக பொதுபல செனாவில் இணைந்து செயலாற்றி வரும் இவர், பொதுபல சேனாவின் பல நிகழ்ச்சிகளில் ஊர்வலங்களில் கலந்து கொண்டவர் எனவும் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும்,
அதேவேளை இனவாத கருத்துக்களை பேஸ்புக்கில் பதிவேற்றி வந்த ஒருவரையும் கைது செய்துள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்தனர். mn