(தினமும் 4 பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா..?)
பாதாம் சுவைமிகுந்தது, இவற்றை பாண வகை, இனிப்பு வகைகளில் சுவையூட்டியாக சேர்த்துக் கொள்கின்றனர்.
இதில் விட்டமின், கனியுப்பு, மக்னீசியம், கல்சியம், ஒமேகா-3 அமிலம் அதிகம் செறிந்துள்ளதால் தினமும் இதனை உட்கொண்டு நம் உடலின் ஆரோக்கியத்தை பேண முடிகிறது.
பாதாமை நீரில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வருவதனால், உடலிற்கு அதிகளவு ஊட்டச்சத்து கிடைப்பதுடன், சமிபாட்டை சீர்செய்கின்றது.
ஆரோக்கியம் நிறைந்த பாதாம் தினமும் சாப்பிடுவத்னால் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
எலும்புகள் வலிமையடையும்
பாதாமில் உள்ள விட்டமின், கனியுப்புக்கள், பொஸ்பரஸ் எலும்புகள் உக்குவதை தடுத்து வலிமையடையச் செய்கின்றது.
கொழுப்பைக் கட்டுப்படுத்தல்.
இதில் உள்ள கல்சியம் மற்றும் விட்டமின் ஈ உடலில் கொழுப்பை சீராக வைத்திருக்க உதவுகின்றது.
மூளை வளர்ச்சியை அதிகரித்தல்.
பாதாமில் Riboflavin, L-carnitine செறிந்துள்ளதால் மூளையின் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்வதுடன், அல்சைமர் போன்ற நோய்கள் வராமல் தடுக்கின்றது.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருத்தல்.
புரோட்டின், பொட்டாசியம், நல்ல கொழுப்பு நிறைந்த பாதம் இதயத்தின் ஆரோக்கியத்தை பேணுவதுடன், இரத்த நாடிகளில் வீக்கம் ஏற்பட்டால் அதனை இலகுவாக குணப்படுத்துகின்றது.
மேலும் இதில் உள்ள மக்னீசியம் நெஞ்சுவலி வராமல் தடுப்பதுடன், விட்டமின்-ஏ இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை குணப்படுத்த வல்லது.
இரத்த அழுத்தத்தை சீராக்கின்றது.
பாதாமில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றது.
உடலின் சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.
தினமும் நான்கு பாதாம் சாப்பிடுவதனால் உடலின் ஆரோகியம் பேணப்படுவதுடன், சக்தி அதிகரிக்கின்றது.