(நீரிழிவு நோயாளர்கள் வெறு வயிற்றில் இந்த நீரை குடித்தால் என்ன நன்மை தெரியுமா..?)
நம் முன்னோர்கள் உணவே மருந்து, மருந்தே உணவாக வாழ்ந்து வந்தனர்.
இயற்கையில் கிடைக்கும் பச்சைகாய் வகைகள் மற்றும் இலை வகைகள் அதிகம் உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து வந்தனர்.
ஆனால் இன்றைய இளைஞர்கள் இவ் வகை உணவுகளை அதிகம் விரும்புவதில்லை.
அதில் வெண்டைக்காய்யின் மருத்துவ குணங்களை பலரும் அறியாததனால் உணவில் இருந்து ஒதுக்குகின்றனர்.
உடலிற்கு ஆரோக்கியத்தை வழங்கும் 1 கப் வெண்டைக்காயில் 30 கலோரி, 3g நார்ப் பொருட்கள், 2g புரோட்டின், 7.6g மாப்பொருட்கள், 0.1% கொழுப்பு, 21mg விட்டமின்-சி, 80g போலிக் அமிலம், 60mg மக்னீசியம் உள்ளது.
வெண்டைக்காயை உணவில் பச்சையாகவோ, அவித்து அல்லது பொரித்து சேர்த்துக் கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு நீங்கும்,
ஆஸ்த்துமா பிரச்சினைகளை குறைக்கும், சிறுநீரகத்தை சுத்தம் செய்கின்றது.
மேலும் வயிற்றில் உள்ள குளுகோஸை உறிஞ்சுவதில் வெண்டைக்காய் சிறப்பாக செயற்படுகிறது. குளுக்கோஸை உறிஞ்சுவத்ற்கான் சிறந்த வெண்டைக்காய் உணவு
செய்முறை
இரவில் நான்கு வெண்டைக்காய் எடுத்து நுனிப் பகுதிகளை வெட்டி, இரண்டாக பிளக்கவும், வெட்டப்பட்ட வெண்டைகாய்யை மறு நாள் காலை வரை நீரில் ஊற விடவும்.
வெறு வயிற்றில் இந்த நீரை குடித்து வந்தால், உடலில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்த முடியும்.