(சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை)
சமூக வலைத்தளங்களில் பொய்யானத் தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (04) நடைபெற்று வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தீர்மானம் தொடர்பில், ஏதேனும் பொய்யானத் தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் குறித்தே, அமைச்சரவையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.