(திங்கட்கிழமை அமைச்சரவையில் மாற்றம் – ரஜித)
நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவுக்கு அமைவாக எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் மாற்றம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரஜித சேனாரத்ன கூறினார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் கூறினார். இந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக அரசாங்கம் மேலும் பலம் பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் சம்பந்தமாக திட்டமிட்டுக் கொள்வதற்கு இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாகவும் அமைச்சர் ரஜித சேனாரத்ன கூறினார்.