(பெரும்பாலான மாகாணங்களில் மழை)
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வில் எதிர்வரும் 15ம் திகதி வரை இலங்கையின் பல இடங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை கல்குடா, வெலிகந்த, பொலன்னறுவை, அம்பன்பொல, மதுரங்குளி ஆகிய இடங்களில் நண்பகல் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை அடுத்து வரும் நாட்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பெரும்பாலான மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவத்துள்ளது.
வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் காலை நேரத்திலும் மழை பெய்யக்கூடும். குறிப்பாக மேற்கு, வடமேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.