• Sun. Oct 12th, 2025

“முஸ்லிம் தலைவர்களில் நம்பிக்கை இழந்து விட்டோம்” – தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகம்

Byadmin

Apr 10, 2018

(“முஸ்லிம் தலைவர்களில் நம்பிக்கை இழந்து விட்டோம்” – தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகம்)

மேல் மாகாணம் மற்றும் பாரிய நகர் அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக் கவின் வேண்டுகோளுக்கு
அமைய தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் நிர்வாகம் பள் ளிவாசலை தம்புள்ளையில் பிறிதோர் இடத்துக்கு இட மாற்றிக் கொள்வது தொடர்பில் பௌத்த மதத்தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்க்க மான முடிவொன்றினை எட்டவுள்ளதாகத் தெரிவித் துள்ளது.

தம்புள்ளை புனித நகர் எல்லையினுள் அமைந் திருக்கும் பள்ளிவாசலை தற்போதுள்ள இடத்திலி ருந்து அகற்றி வேறோர் இடத்தில் நிர்மாணிப்பதற்கு மேல்மாகாணம் மற்றும் பாரிய நகர அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபையினூடாக ஏற் கனவே காணியொன்றினை இனங்கண்டு வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்தி ருந்தது.

இந்தக் காணியை உத் தியோக பூர்வமாக வழங் குவது தொடர்பான கலந்துரையாடலொன்று மேல்மாகாணம் பாரிய நகர அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது. கலந்து ரையாடலில் பௌத்த, முஸ்லிம், இந்து மதத்த லைவர்கள் கலந்து கொண் டிருந்தனர். காணியை வழங்குவதற்கான நடவடிக் கைகளை முன்னெடுக்கும் படி அமைச்சர் சம்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட் டிருந்தார்.

இந்நிலையில் தம்புள்ளையைப் பாதுகாக்கும் அமைப்பு பள்ளிவாசலுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவதை எதிர்த்து தமது எதிர்ப்பினை ஜனா திபதிக்கும் அறிவித்தது.  அமைச்சர் சம்பிக்கவுக்கு எதிராக சுவரொட்டிகளும் தம்புள்ளையில் ஒட்டப் பட்டன.

இதையடுத்து தம்புள்ளை புனித நகர் அபிவிருத்தித்திட்டத்தை அமைச்சர் சம்பிக்க இடைநிறுத்தி வைத்தார். தம்புள்ளையிலுள்ள பௌத்த, முஸ்லிம், இந்து மதத்தலைவர்கள் இணக் கப்பாடு ஒன்றினை எட்டும் வரை புனித நகர் அபிவி ருத்தித் திட்டம் முன்னெ டுக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தார். இதையடுத்தே தம் புள்ளை ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் தம்புள்ளை புனித நகர் பூமியை நிர்வகிக்கும் அஸ் கிரிய மகாநாயக்க தேரர் உட்பட பௌத்த மதத்தலைவர்களைச் சந்தித்து விரைவில் தீர்க்கமான முடி வினை எட்டவுள்ளதாக தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் எஸ். வை.எம். சலீம்தீன்  தெரி வித்தார்.

அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், முஸ்லிம் அரசியல் வாதிகள் 2012 ஆம் ஆண்டு முதல் தம் புள்ளை பள்ளிவாசலுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக கூறிவருகிறார்கள். ஆனால் எதுவும் நடைபெற வில்லை. பொய் வாக்குறுதி களையே அவர்கள் வழங் கியிருக்கிறார்கள், அதனால் நாம் முஸ்லிம் அரசியல் தலைவர்களில் நம்பிக்கை இழந்து விட்டோம். பௌத்த மதத்தலைவர் களுடன் கலந்துரையாடி தீர்வுக்கு வரவுள்ளோம் என்றார்.

மேலும் பள்ளி வாசலை சூழவுள்ள 33 குடும்பங்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அப்புறப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தங்களுக்கு மாற்றிடம் வழங்கப்பட்டாலே அவ்விடத்திலிருந்தும் வெளியேற முடியும் என மக்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

 -ஏ.ஆர்.ஏ.பரீல் – விடிவெள்ளி-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *