• Sun. Oct 12th, 2025

சம்மாந்துறையை ஆட்கொள்ளும் மயில் (கட்டுரை)

Byadmin

Jun 12, 2017

நேற்று முன்தினம் 10-06-2017ம் திகதி சனிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சம்மாந்துறையில் நடாத்திய  இப்தார் நிகழ்வில் சுமார் பத்தாயிரமளவிலானோர் கலந்து கொண்டதாக அறிய முடிகிறது. கூட்டம் பார்க்க பல கட்சிகளை சேர்ந்தவர்கள் சென்றாலும் இப்தார் போன்ற நிகழ்வுகளில் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர்களே செல்வார்கள். அவ்வாறானவர்களின் எண்ணிக்கையே பத்தாயிரத்தை எட்டினால் அவர்களின் மனைவி,மக்கள்,இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொண்டு அரசியல் சாயம் பூசிக்கொள்ள விரும்பாதவார்கள் அனைவரையும் சேர்த்து கணக்கு போட்டு பார்த்தால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  எதிர்வரும் தேர்தல்களில் சம்மாந்துறை தொகுதியின் மொத்த வாக்கையும் தன் வசப்படுத்தும் என்பதை குறித்த இப்தார் நிகழ்வு சுட்டி காட்டுகிறது.

 

மேலும்,சம்மாந்துறையில் மு.காவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியோடு  மாத்திரமல்லாது அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தலைவர் என்ற பதவியோடு மன்சூர் உள்ள நிலையிலும் மாகாண சபை உறுப்பினராக மாஹிர் உள்ள நிலையிலும் எந்த வித சிறு அரசியல் அதிகாரமுமின்றி (ஒரு பிரதேச சபை உறுப்பினர் அதிகாரம் கூட இல்லை) இத்தனை மக்களை கூட்ட முடியும் என்றால் சம்மாந்துறைக்கு அ.இ.ம.காவின் அரசியல் அதிகாரம் கிடைக்கலாம் என நம்பப்படும் நிலையில் அதுவும் கிடைத்தால் சம்மாந்துறையின் நிலையை நான் இங்கு குறிப்பிட தேவையில்லை என நினைக்கின்றேன்.

 

எந்த விடயமாக இருந்தாலும் அதன் அடித்தளமே மிக முக்கியமானது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசானது எந்த வித அடித்தளமுமின்றி மிக குறுகிய காலத்துக்குள் 33 000 இற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருந்தது. தற்போது அதற்கு சம்மாந்துறையில் மிகவும் பலமான அடித்தளம் கிடைத்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள மிகவும் அதிகமான வாக்காளர்களை கொண்ட ஒரு ஊர் தான் சம்மாந்துறையாகும். அதன் ஆதவை யாராவது ஒருவர் பெற்றுக்கொள்வாராக இருந்தால் அவரை அவ்வளவு இலகுவில் யாராலும் அசைத்து பார்க்க முடியாது. இவற்றை வைத்து பார்க்கும் போது அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு முன்னர் கிடைத்ததை விட  இரண்டு மடங்கு எண்ணிக்கை வாக்குகளை அது பெரும் என்பதில் எதுவித  ஐயமில்லை

-அல் ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *