(இன்று முதல் வழமைக்கு திரும்புகிறது பல்கலைக்கழகங்கள்)
கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 50 நாட்களாக மூடப்பட்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இன்று (17) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எவ்வாறாயினும் சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னதாக அவர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தியதற்கமைவாக இன்று முதல் மீண்டும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
அதன்படி இன்றைய தினம் முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகளை பாதிப்பின்றி மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.