(கனரக வாகனங்கள் பயணத்திற்கு தடை)
இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உடவளவ நீர்தேக்கத்துக்கு விஜயம் செய்துள்ளதுடன் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பொறியியலாளர்களுடன் அமைச்சர் அங்கு விஜயம் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் உடவளவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் குறித்த பாதையில் கனரக வாகனங்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.