• Sun. Oct 12th, 2025

சீதுவ நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளை

Byadmin

Apr 18, 2018

(சீதுவ நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளை)

சீதுவ நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் இன்று(18) காலை கொள்ளைச் சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தலைக்கவசம் அணிந்து துப்பாக்கி ஒன்றுடன் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையிட்டுள்ளதுடன், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்று இன்னும் மதிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநரை கைது செய்வதற்காக சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *