(20ம் திருத்தச் சட்டம் மே மாத முதல் வாரத்தில்)
எதிர்வரும் மே மாத முதல் வாரத்தில் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்படும் போதே 20ம் திருத்தச் சட்டமும் சமர்ப்பிக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அறிவித்துள்ளது.
தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேரணையாக குறித்த இந்த திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
பராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்ட காரணத்தினால் 20ம் சட்டம் குறித்த யோசனையை பாராளுமன்றில் சமர்ப்பிப்பது காலம் தாழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் தினத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி விடுத்துள்ள கோரிக்கையை யோசனையில் உள்ளடக்கக்கூடிய சாத்தியம் கிடையாது எனவும், குறித்த சட்டம் குறித்து ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஜே.வி.பி இன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.