• Sat. Oct 11th, 2025

இராஜினாமா செய்தவர்களின் குழு ஜனாதிபதியை சந்திக்க அவசரமாக லண்டன் பயணம்

Byadmin

Apr 20, 2018

(இராஜினாமா செய்தவர்களின் குழு ஜனாதிபதியை சந்திக்க அவசரமாக லண்டன் பயணம்)

அரசாங்கத்துடன் இருந்து இராஜினாமா செய்த 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களினதும் அவசர தீர்மானங்களை எடுத்துக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தலைமையிலான மூவரடங்கிய குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்க லண்டன் சென்றுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

இராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் நடைபெற்ற அவசர கூட்டமொன்றின் பின்னர் இந்தக் கருத்தை அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றுள்ளார். இன்றுடன் நிறைவடையவுள்ள இம்மாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் ஜனாதிபதி ஓரிரு தினங்களில் நாடு திரும்பவுள்ள நிலையில் 16 பேர் கொண்ட குழுவின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை அவசரமாக சந்திக்கச் சென்றுள்ளனர்.

இன்று (20) எதிர்க் கட்சியின் அமர்வதற்கான தமது கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கவுள்ளதாகவும் லக்ஷ்மன் யாபா எம்.பி. குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *