• Sat. Oct 11th, 2025

பொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு

Byadmin

Apr 20, 2018

(பொதுநலவாய நாடுகளின் கண்டல் தாவர பாதுகாப்பு தலைமைத்துவம் இலங்கைக்கு)

பொதுநலவாய உறுப்பு நாடுகளின் கண்டல் தாவரப் பாதுகாப்பு தொடர்பான தலைமைத்துவம் வகிக்கும் நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

பொதுநலவாய அமைப்பின் 25ஆவது அரச தலைவர்கள் மாநாடு நேற்று (19) லண்டன் நகரில் ஆரம்பமானதுடன், நேற்று பிற்பகல் இடம்பெற்ற அரச தலைவர்களின் பிரதான அமர்வில் இது தொடர்பாக பிரகடனம் செய்யப்பட்டது.

அதற்கேற்ப உலகில் கண்டல் தாவரங்களை பாதுகாத்தல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விடயங்கள் பற்றி கண்டறிதல் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் என்பவற்றிற்கான செயற்படுத்துகை குழு இலங்கையின் தலைமையில் பெயரிடப்படவுள்ளது.

2015 ஆம் ஆண்டின் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கண்டல் தாவர பாதுகாப்பு செயற்திட்டங்கள் மிக வெற்றிகரமானதாக உலகின் அவதானத்தை பெற்றுள்ளதன் பெறுபேறாகவே கண்டல் தாவர பாதுகாப்பு தொடர்பில் உலகில் அதிக முன்னேற்றத்தை பெற்றுக்கொண்ட நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *