(ஆசிபா படுகொலை – சர்வதேச நாணய நிதிய இயக்குநர் கவலை)
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவா நகரில் 6 பேரால் சிறுமி கற்பழிக்கப்பட்டு பின் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்தே கூறும் போது பிரதம மந்திரி நரேந்திர மோடி தொடங்கி இந்திய அதிகாரிகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என கூறி உள்ளார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவா மற்றும் உத்திரப்பிரதேச மாநிலம் உனோன் ஆகிய இடங்களில் நடந்து உள்ள கற்பழிப்புச் சம்பவங்கள் தொடர்பாக நாடு தழுவிய அதிர்ச்சிக்கு பிறகு தற்போது சர்வதேச நாணய நிதிய தலைவர் கூர்மையான கருத்துக்கள் வந்துள்ளன.
கிறிஸ்டின் லகார்தே கூறியதாவது;-
இந்தியாவில் என்ன நடக்கிறது. நடந்தது அருவெறுப்பானவையாக உள்ளது. நான் இந்திய அதிகாரிகளை நம்புகிறேன். பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில்இந்திய பெண்களுக்கு பாதுகாப்பு தேவை.
நான் டாவோஸில் கடைசியாக இருந்தபோது, பிரதம மந்திரி மோடி பேச்சுக்குப் பிறகு இந்தியாவின் பெண்களை அவர் குறிப்பிடவில்லை என்று நான் அவரிடம் சொன்னேன். அவற்றைப் பற்றி பேசுவதற்கு ஒரு கேள்வியாக
எழுப்பவில்லை என கூறினார்.
இது சர்வதேச நாணய நிதியத்தின் கருத்து அல்ல, இது அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு என்று பின்னர் அவர் தெளிவுபடுத்தினார்.”இது ஒரு சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ நிலை அல்ல. இது எனது நிலைப்பாடு” எனக் கூறினார்.