(தென் மாகாண உள்ளூராட்சி மன்றங்களை கொண்டு செல்லமுடியாத அளவு செலவு அதிகரிப்பு)
தென் மாகாண உள்ளுராட்சி மன்றங்களை கொண்டு நடத்த முடியாத அளவு அதன் செலவு அதிகரித்துள்ளதாக உள்ளூராட்சி சபை திணைக்களம் தெரிவித்துள்ளது. தென் மாகாணத்தில் உள்ள சபைகளில் சுமார் 500 அளவில் இருந்த உள்ளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளதால் மாதம் ஒன்றுக்கு 200 லட்சம் மேலதிக செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.