(மாணிக்கல் கல் வர்த்தகத்தின் மீதான வரியால் முஸ்லிம்களுக்கே அதிகம் பாதிப்பு)
அண்மையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வரி திருத்தத்தம்,இலங்கையில் மாணிக்க கல் வர்த்தகத்தை அதிகம் மேற்கொள்ளும் முஸ்லிம்களைவெகுவாக பாதிக்கும் என அந்த தொழிலில் ஈடுபடும் வர்த்தகர்களால்விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
மாணிக்க கல் வர்த்தகத்திற்கு கடந்த காலத்தில் நிகர லாபத்தில் 0.50 வீதவரி அறவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 14 வீதமாகஉயர்த்தப்பட்டுள்ளது.இது சிறிய அதிகரிப்பல்ல. இது ஜெம் வர்த்தகத்தைமேற்கொள்வோரை மிகக் கடுமையாக பாதிக்கும் என அவ்வர்தகத்தில்ஈடுபடுவோர் குறிப்பிடுகின்றனர்.
இவ் வர்த்தகத்தை இலங்கை முஸ்லிம்களே அதிகம்மேற்கொள்கின்றனர். இது முஸ்லிம்களின் பொருளாதரத்தில் பெரும்எதிர் தாக்கம் செலுத்தும். இவ் ஆட்சி அமையப்பெறுவதற்கு முன்பு,ஆட்சியை கைப்பற்றுவதற்கான தேர்தல் பிரச்சார கூட்டங்களில்,பேருவளை போன்ற பகுதிகளில் அங்குள்ள அமைப்பாளர்களால்மாணிக்க கல் வர்த்தகத்தை மேம்படுத்த பல வாக்குறுதிகள்வழங்கப்பட்டுமிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையிலேயே இந்தவரி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர ஏற்றுமதி செய்யப்படும் மாணிக்க கற்கள் 100 கரட்களைதாண்டினால் அதற்கு 25000 கட்டணமாக செலுத்த வேண்டும் என புதியசட்டம் போடப்பட்டுள்ள அதேவேளை ஏற்றுமதி செய்யப்படும் மாணிக்ககற்கள் 10
கரட்டை தாண்டினால் அதற்கு மாணிக்க கல் கூட்டுத்தாபணத்தின்சான்றிதழ் அவசியம் என்ற புதிய சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் லட்சக்கணக்கான முஸ்லிம்களே மாணிக்க கல்வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த புதிய கெடுபிடிகள்குறித்த வர்த்தகத்தை வெகுவாக பாதிக்கும் என குறித்த வர்த்தகத்தில்ஈடுபடும் பிரபல மாணிக்க கல் வர்த்தகர் ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த நிலை தொடர்ந்தால் ஜப்பானில் இருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்குவாகன ஏற்றுமதியில் இலங்கை வர்த்தகர்கள் ஈடுபடுவதை போலஆபிரிக்க நாடுகளில் இருந்து சிங்கப்பூர் ஹொங்கொங் ஆகியநாடுகளுக்கு மாணிக்க கற்களை இறக்குமதி செய்ய இலங்கைவர்த்தகர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் மேலும் கூறினார்.
இதனால் இலங்கையில் மாணிக்க வர்த்தக ஏற்றுமதி பாரியவீழ்ச்சியடையும் என கூறிய அவர் இங்கு லட்சக்கணக்கான தொழில்இழப்புகள் ஏற்படும் எனவும் கூறினார்.