இன்று ஆரோக்கியமான விமர்சனம் நடைமுறையிலி்ல்லாத நாணயம் போன்றதாகும்.ஏனெனில் ஆரோக்கியமான விமர்சனம் தற்காலத்தில் அறிதாகவே காணப்படுகின்றது.
மனிதர்களின் கருத்துக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல.அக்கருத்துக்களை விமர்சனம் செய்யும் பொழுது அதை ஆரோக்கியமான முறையில் அனுகி விமர்சனம் செய்வது சாலச் சிறந்ததாகும்.
மேலும் ஒருவரை விமர்சனம் செய்யும் முன் அதனை விமர்சனம் செய்வதற்கு தனக்கு தகுதி (qualification)உள்ளதா என ஒவ்வொரு நபரும் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
துறைசார் ஒருவரின் கருத்தையோ அல்லது அறிஞர் ஒருவரின் கருத்தையோ விமர்சனம் செய்யும் முன் அதனை விமர்சனம் செய்யும் அளவுக்கு என்னிடம் போதுமான அறிவு ஆழம் அவ்விடயத்தில் இருக்கின்றதா என்றும் சற்று சிந்திக்க வேண்டும்.
அல்லது அந்த நபரையோ அவரின் கருத்தையோ ஆரோக்கியமாக விமர்சிக்கும் அளவுக்கு ஆளுமையை விருத்தி (personality development) செய்துவிட்டு பின்பு விமர்சனம் செய்ய வேண்டும்.
ஆரோக்கியமான விமர்சனம் என்பது
நாம் விமர்சிக்கும் மனிதனின் ஆளுமையை விருத்தி செய்ய உதவ வேண்டும்.மாற்றமாக அவனது ஆளுமையின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக ஒரு போதும் இருந்துவிடக்கூடாது.
இன்று குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஆரோக்கியமான விமர்சனம் இல்லாததன் காரணமாகவே கருத்து பரிமாறல்கள் கருத்து மோதல்களாக பரிணாமம் எடுத்து இறுதியில் சிந்திக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு சென்றுகொண்டு இருக்கின்றது.
எனவே எமது சகோதரர்கள் ஆரோக்கியமான விமர்சனமுறையை தெளிவாக அறிந்துகொண்டு விமர்சனம் செய்யமுன்வரவேண்டும்.
குறிப்பாக நாம் சிறுபான்மை இனத்தவர்களாக வாழும் இன் நாட்டில் பெரும்பான்மை இனத்து சகோதரர்களுடன் ஆரோக்கியமான உரையாடல் மற்றும் விமர்சனம் நமது அடுத்தகட்ட நகர்வுக்கு பலமாக அமையும்.
As – sheikh M.T.M. Imran (Azhary) B.A (Hons)