• Sun. Oct 12th, 2025

முஸ்லிம்களும் விண்ணப்பிக்க வேண்டும் – இராணுவத்திற்கு ஆட்கள் தேவை

Byadmin

May 9, 2018

(முஸ்லிம்களும் விண்ணப்பிக்க வேண்டும் – இராணுவத்திற்கு ஆட்கள் தேவை)

இலங்கை இராணுவத்திற்கு ஆண்கள் மற்றும் மகளீர் தகுதியுடைய அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்காக இராணுவ தலைமையகத்தினால் விண்ணப்ப படிவங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்பத்திற்கு ஏற்ற தொழில் ரீதியில் தகுதி பெற்ற வைத்திய அதிகாரிகள், மருத்துவ ஆலோசகர்கள், பல் மருத்துவர்கள் மற்றும் பொறியியளாலர்கள் தகவல் தொழில்நுட்ப பயிற்ச்சியாளர்கள் மற்றும் இசைத் துறையில் பயிற்சி பெற்றவர்கள், பேண்ட் வாத்தியர்கள் கணக்கு அதிகாரிகள் மற்றும் மேலதிக கல்வித் தகுதி பெற்றவர்கள், அலுவலக தகுதி பெறுவர்கள் 2018 மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் இராணுவத்திற்குப் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
இவர்களுக்கு மாதாந்த சம்பளம், போக்குவரத்து, சீருடைகள், மருத்துவ வசதிகள், விடுதி சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் ஆகியவற்றோடு சேர்த்து வெளிநாட்டில் ஐ.நா. அமைதிகாக்கும் பணிகளுக்கு செல்ல சந்தர்ப்பமும் வழங்கப்படும்.
மேலதிக விபரங்களுக்காக் இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் 0112514603, 0112514605 (ஆட் சேர்க்கும் அதிகாரி)
இலங்கை முஸ்லிம்களும், இராணுவ சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென சமூகர் ஆர்வலர்கள் கோரியுள்ளமை இங்கு குறிப்பிடம்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *