(வெறும் வயிற்றில் இந்த உணவுளை சாப்பிட்டால் ஆபத்தாம்.. எச்சரிக்கை பதிவு..!)
காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். காலை உணவின் மூலம் தான் அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். அதற்காக காலையில் வெறும் வயிற்றில் அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது.
வெறும் வயிற்றில் உணவுகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு வெறும் வயிற்றில் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது எனத் தெரியாதா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏனெனில் இக்கட்டுரையில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
சாப்பிடக்கூடிய உணவு: முட்டை
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட உகந்த உணவுகளில் முட்டை சிறந்த உணவு. இதில் புரோட்டீன்கள் மற்றும் மெட்டபாலிசம் மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் இதர ஊட்டச்சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளது.
சாப்பிடக்கூடிய உணவு: தர்பூசணி
தர்பூசணியில் நீர்ச்சத்து வளமான அளவில் உள்ளது. மேலும் இதில் இதயம் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் லைகோபைன் உள்ளது.
சாப்பிடக்கூடிய உணவு: ஓட்ஸ்
ஓட்ஸ் காலை உணவாக சாப்பிட ஏற்ற ஒன்று. இது ஹைட்ரோப்ளூரிக் அமிலத்தால் வயிற்றில் எரிச்சல் அல்லது பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருப்பதால், கொலஸ்ட்ரால் குறையும் மற்றும் மெட்டபாலிசம் ஊக்குவிக்கப்படும்.
சாப்பிடக்கூடிய உணவு: ப்ளூபெர்ரிஸ்
ப்ளூபெர்ரி பழங்களில் ஊட்டச்சத்துக்கள் வளமாக உள்ளது. இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், இரத்த அழுத்தம் சீராக்கப்படும், மெட்டபாலிசம் மேம்படும் மற்றும் நினைவுத் திறன் மேம்படும்.
சாப்பிடக்கூடிய உணவு: தேன்
காலையில் தேனை சாப்பிடுவதால், உடலில் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் மனநிலை மேம்படும். இதனால் அன்றைய நாளில் ஒரு செயலில் நன்கு கவனம் செலுத்த முடியும்.