(அரச வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில்)
அரச வைத்தியர்கள் நாளை(17) ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை (17) காலை 8.00 மணி முதல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்து கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலேயே குறித்த இந்த வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.