(பள்ளிவாசல்களுக்கு தாமதமின்றி நஷ்டஈடு வழங்குங்கள் – ரிஸ்வி முப்தி)
கண்டி வன்செயல்களின்போது இனவாதிகளின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களுக்கு தாமதமின்றி நஷ்டஈடுகளை வழங்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களுக்கான நஷ்டஈடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் அவர் முஸ்லிம் அமைச்சர்களைக் கோரியுள்ளார்.