அர்ஜுன் மகேந்திரனை சர்வதேச பொலிஸ் ஊடாக கைது செய்து இலங்கையிடம்
ஒப்படைக்க முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.
முறி மோசடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்பில் அரச தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி இந்த விடயத்தை நீதி மன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூர் நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக சர்வதேச பொலிஸ் பிடையாணைக்கு அமைவாக அந்த நாட்டு பிரஜை ஒருவரை கைது செய்து வேறு நாட்டிற்கு அனுப்ப முடியாது என சிங்கப்பூர் அரசு இலங்கைக்கு அறிவித்துள்ளதாகவும்,ராஜதந்திர முறையில் அர்ஜுன மஹேந்திரனை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்பில் அரச தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நீதி மன்றத்தில் தெரிவித்தார்.